அங்கு செல்லாதீர்கள்; அமெரிக்க விடுத்த எச்சரிக்கை!
சீனா ஆளுகைக்கு உட்பட தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங்கில் இப்போது மிக மோசமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தம்து பிரஜைகளை அங்கு செல்லவேண்டாம் என அமெரிக்க எச்சரித்துள்ளது.
ஹாங்காங்கில் மீண்டும் திடீரென பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கி உள்ளது. இதனால் அந்நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 12 ஆயிரம் பாதிப்புகளை சந்தித்த ஹாங்காங், கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 ஆயிரம் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
கொரோனாவால் அல்லல்படும் மக்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சாப்பிடக்கூட எதுவும் இல்லாமல் பரிதவிக்கும் நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கில் சராசரியாக தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.
அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஹாங்காங் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசு, ஹாங்காங்கிற்கு பயணம் செல்ல வேண்டாம் என குடிமக்களை எச்சரித்துள்ளது.
கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனாவால் குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படும் அபாயத்தை மேற்கோள் காட்டி, இந்த அறிவிப்பு வந்துள்ளது. அதேவேளை கொரோனா காரணம் காட்டி பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதால் ஹாங்காங்கிற்கு பயணம் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, தற்போது இதன் இறப்பு விகிதம் சிங்கப்பூரை விட நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.