இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்; பிரஜைகளுக்கு அமெரிக்க விடுத்த எச்சரிக்கை
சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்கா தன் பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் CDC, திங்களன்று அதன் ‘4ம் நிலை மிக ஆபத்தான’ நாடுகள் பட்டியலில் 12 நாடுகளை புதிதாக சேர்த்துள்ளது.
அதன்படி மெக்சிகோ, பிரேசில், சிங்கப்பூர், ஈக்வடார், கொசோவோ, பிலிப்பைன்ஸ், பராகுவே, அங்குவிலா, பிரெஞ்சு கயானா, மால்டோவா மற்றும் செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் ஆகிய நாடுகள் CDC-யின் மிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் இந்த நாடுகளுக்கு பயணிப்பதற்கு எதிராக CDC அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை தற்போதைய நிலவரப்படி CDC-யின் மிக ஆபத்தான நாடுகள் பட்டியில் கிட்டதட்ட 130 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பட்டியிலிப்பட்டுள்ளன.
இந்நிலையில் CDC மிக ஆபத்தான நாடுகள் என புதிததாக பட்டியலிட்டுள்ள மெக்ஸிக்கோ உட்பட சில நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அதன் பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.