கனடாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா?
கனடாவில் அரிசி தட்டுப்பாடு குறித்து அச்சமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நுகர்வோர் அதிகளவான அரிசியை கொள்வனவு செய்து சேமிக்கத் தொடங்கியுள்ளனர்.
எனினும் கனடாவில் இதுவரையில் அவ்வாறான ஓர் பதற்ற அரிசிக் கொள்வனவு நிலைமைகளை சுப்பர் மார்கட்களில்; இன்னமும் காண முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட ஒரு காலத்தில் விளைச்சல் குறைவதனால் பதற்றமடைந்து அரியை களஞ்சியப்படுத்த வேண்டியதில்லை என நியூபிரவுண்ஸ்விக் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் முர்ஸிட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
கனடா தாய்வான் மற்றும் தாய்லாந்திலிருந்து அதிகளவு அரிசியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகளவில் அரிசியை கொள்வனவு செய்தால், நிச்சயமாக விலை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.