இந்த டொரன்டோ பெண்ணை உங்களுக்கு தெரியுமா!
கனடாவின் டொரன்டோ பெரும்பாக பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பற்றிய விபரங்களை, பொதுமக்களிடம் போலீசார் கோரியுள்ளனர்.
ரிச்மண்ட்ஹில் பகுதியில் சென்டர் ஸ்ட்ரீட் மற்றும் எக்கின்சன் ஸ்ட்ரீட் ஆகியனவற்றுக்கு அருகாமையில் பெண் ஒருவர் நிற்கதியாக இருக்கின்றார் என போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
பொதுமகன் ஒருவர் தொலைபேசி வழியாக இந்த தகவலை வழங்கி உள்ளார்.
காலநிலைக்கு ஏற்ற வகையில் ஆடை அணியாது பேச முடியாத நிலையில் பெண் ஒருவரை போலீசார் கண்டுள்ளனர்.
குறித்த பெண் தொடர்பான எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என போலீசார தெரிவிக்கின்றனர்.
யோர்க் பிராந்திய போலீசார் இந்த பெண்ணின் பாதுகாப்பினை உறுதி செய்துள்ளனர்.
இந்தப் பெண் தொடர்பிலான தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெற்றால் போலீசாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் நிற்கதியான நிலையில் இருந்த பெண் ஒருவரை அவரது குடும்பத்தினருடன் மீள இணைத்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.