பற்களை திருடி விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த வைத்தியர்! அம்பலமான சம்பவம்
ஜப்பானில் பற்களை திருடி விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த வைத்தியர் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.
கியூஷு மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த வைத்தியர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்துள்ளார்.
அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் சுலபமாக அனைத்து அறைக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது வைத்தியரின் திருட்டு அம்பலமானது.
இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறைப்ப்பாட்டின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.