கனடாவில் உயிர் காத்த மருத்துவருக்கு 'அதிர்ச்சி'

Canada
By Kamal Jul 08, 2026 01:15 AM GMT
Report

கனடாவின் எட்மண்டன் நகரில், மாரடைப்பால் உயிருக்கு போராடிய ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவருக்கு, பாராட்டுக்கு பதிலாக பெரும் தொகைக்கான மருத்துவப் கட்டணப் பட்டியல் வந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் 19 அன்று, மருத்துவர் இயன் சுதாந்தோ ரிவர்பெண்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கூடைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருடன் விளையாடிய சக வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உணர்ந்த மருத்துவர் இயன், உடனடியாக முதலுதவியான சி.பி.ஆர் (CPR) வழங்கத் தொடங்கினார்.

கனடாவில் உயிர் காத்த மருத்துவருக்கு

அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த பள்ளியில் தானியங்கி இதய அதிர்வு கருவி (AED) இருந்ததால், அதைக்கொண்டு தீவிர முயற்சி செய்து அந்த நபரை மீண்டும் சுவாசிக்க வைத்தார்.

மருத்துவமனைக்கு வெளியே நான் சி.பி.ஆர் செய்வது இதுவே முதல்முறை. நல்லவேளையாக அங்கு அந்த AED கருவி இருந்தது, அதுதான் அவரது உயிரைக் காக்க முக்கிய காரணமாக அமைந்தது, என்று இயன் பின்னர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அவசர மருத்துவக் குழுவினர் (Paramedics) சம்பவ இடத்திற்கு வந்து, மீட்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, தொடர்ந்து சி.பி.ஆர் செய்ததால் சோர்வடைந்திருந்த மருத்துவர் இயனையும் அங்கிருந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் பரிசோதித்துச் சென்றார்.

விபத்து நடந்து சில நாட்களுக்குப் பிறகு, மருத்துவர் இயனுக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது. அதைத் திறந்து பார்த்த அவருக்குப் பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.

அவசர மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்ததற்காக 250 டொலர் கட்டணம் செலுத்தக் கோரி 'ஆம்புலன்ஸ் பில்' அனுப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் கூறும்போது, "ஆம்புலன்ஸில் சென்றால் மட்டுமே கட்டணம் வசூலிப்பார்கள் என்று நினைத்தேன். அவர்கள் வந்து நம்மைப் பரிசோதித்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் என்பது எனக்குத் தெரியாது," எனக் குறிப்பிட்டார்.

இந்த விஷயம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, ஆல்பர்ட்டா சுகாதார சேவைத் துறை (AHS) உடனடியாக தலையிட்டு மருத்துவர் இயனுக்கு அனுப்பப்பட்ட கட்டண பட்டியலை ரத்து செய்தது.

மேலும், இந்த விசித்திரமான விதிமுறையை மறுபரிசீலனை செய்யவுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையில், மருத்துவர் இயனால் காப்பாற்றப்பட்ட நபர், வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US