உயர்நிலைப் பள்ளி கூட தாண்டமாட்டார் என்றவர்... கனடாவின் முக்கிய பதவிக்கு தெரிவு

Arbin
Report this article
கனேடிய மருத்துவ சங்கத்திற்கு தலைவராக முதன் முறையாக பூர்வக்குடி மக்களில் ஒருவர் தெரிவாகியுள்ளார்.
உயர்நிலைப் பள்ளி கூட தாண்டமாட்டார் என கிண்டலடிக்கப்பட்டவர், மருத்துவரானதுடன் தற்போது கனடா மருத்துவத்துறையின் முதன்மை பொறுப்புக்கு வந்துள்ளார் Alika Lafontaine.
அடுத்த சில ஆண்டுகள் குறித்து உண்மையில் உற்சாகமாக உள்ளேன் என தெரிவித்துள்ள டாக்டர் Alika Lafontaine, இதுவரை தாம் கடந்து வந்த பாதைகள் மிக கடுமையானது என்றார்.
தெற்கு Saskatchewan-ல் பிறந்த Lafontaine தற்போது Grande Prairie பகுதி மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். திக்குவாய் கொண்டவராகையால், பள்ளி காலகட்டத்திலேயே தாம் ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்டதாக கூறும் Lafontaine, உயர்நிலைப் பள்ளியில் ஒருமுறை தமது பெற்றோர்களை அழைத்த பள்ளி நிர்வாகம், தாம் பள்ளிப்படிப்பை முடிப்பது கடினம் என தெரிவித்துள்ளனர்.
அதன் பிறகு தமது தாயார் அளித்த ஊக்கத்தால் மட்டுமே தற்போது கனேடிய மருத்துவ சங்கத்தின் தலைவராக தெரிவாகும் நிலைக்கு உயர்வடைந்ததாக Lafontaine சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காலகட்டத்தில் பல பூர்வக்குடி குடும்பங்களின் நிலையும் இது போன்ற சூழல்களை எதிர்கொண்டிருக்கலாம் என்றே Lafontaine தெரிவித்துள்ளார்.