கனடாவில் நோயாளியின் விபரங்களை பகிர்ந்த மருத்துவருக்கு நேர்ந்த கதி
கனடாவில் நோயாளி ஒருவரின் மருத்துவ விபரங்களை அவரது குடும்பத்துடன் பகிர்ந்த கொண்ட மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் முன்னாள் கணவர், மகள் மற்றும் நண்பர்களுடன் இந்த மருத்துவ விபரங்கள் பகிரப்பட்டுள்ளது.
டொக்டர் எலிகா சாபர் ஸாடெக் என்ற மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாத காலத்திற்கு மருத்துவ தொழிலில் ஈடுபடக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொக்டர் ஸாடெக் தொழில் நியதிகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோயாளியின் முன்னாள் கணவரும் ஓர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நோயாளி உளவியல் பாதிப்புக்களுக்காக சிகிச்சை பெற்று வந்தர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.