2 வயது குழந்தையை கடித்துக் குதறிய நாய்: நோவா ஸ்கோடியாவில் சம்பவம்
நோவா ஸ்கோடியாவில் பகல் நேர காப்பகம் ஒன்றில் 2 வயது குழந்தையை நாய் கடித்துக் குதறிய சம்பவம் தற்போது பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோடியா Sackville பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை பகல் ஹாலிஃபாக்ஸ் மாவட்ட காவல்துறையை குறித்த குழந்தையின் பெற்றோர் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர்.
நாய் கடித்துக் குதறிய நிலையில் குழந்தைக்கு உடல் முழுவதும் 75 முதல் 80 காயங்கள் வரை ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகும், அந்த காப்பக உரிமையாளர் பொலிசாரை அறிவிக்கவோ அவசர உதவிக்குழுவினருக்கு தெரிவிக்கவோ இல்லை என கூறப்படுகிறது.
தற்போது மருத்துவ சிகிச்சை பெற்றுள்ள குழந்தை பெற்றோர் கண்காணிப்பில் குணமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.