ஒன்றாரியோ மாணவர்களுக்கு முதல்வரின் அறிவுரை
மாணவர்கள் அலைபேசி பயன்பாட்டை தவிர்க்க வேண்டுமென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.
மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் மாகாணத்தில் பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் பாடங்களை கற்க வேண்டுமென ஆசிரியர்கள் கருதுவதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் வகுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலை முதல் தரம் 6 வரையிலான மாணவர்கள் நாள் முழுவதிலும் அலைபேசிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரம் 7 முதல் ஏனைய வகுப்பு மாணவர்கள் வகுப்பு நேரங்களில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதிபர்கள் ஆசிரியர்கள் இந்த புதிய தடையை அமுல்படுத்துவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.