பிரக்ஸ் குழும நாடுகளுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த மிரட்டல்!
பிரிக்ஸ் குழும நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவான டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அனைத்துலக வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த நிலை ஏற்படலாம் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் தமது கொள்கை இலக்குகளை அடைவதற்கு வரிகளைக் கொண்ட இயக்கத்தைச் செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகத் தளம் ஒன்றில் பிரிக்ஸ் குழும நாடுகள் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தும் என்று கடப்பாடு தெரிவித்தே ஆகவேண்டும் என ட்ரம்ப் கோரியிருக்கிறார்.
ஏனைய நாடுகள் அமெரிக்க நாணயத்துக்குப் பதிலாக மாற்று நாணயத்தைப் பயன்படுத்துவதை அமெரிக்கா பார்த்துக்கொண்டிருக்காது என்று அவர் எச்சரித்தார்.