இனி பேச்சுக்கே இடமில்லை ; ட்ரம்பின் எச்சரிக்கையால் ஈரானுக்கு காத்திருக்கும் சிக்கல்
அமெரிக்கா- ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில்,நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

பாகிஸ்தானில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க பிரதிநிதிகள் புறப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
ட்ரம்ப் கூறியிருப்பதாவது: “ஈரானிடம் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை முன்வைக்க உள்ளோம். அதை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டின் அனைத்து மின் நிலையங்களையும், பாலங்களையும் அமெரிக்கா தகர்த்து எறியும்! எனது பிரதிநிதிகள் நாளை பாகிஸ்தான் செல்கிறார்கள். அங்கு இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும். அதன்பிறகு பேச்சுக்கே இடமிருக்காது”என்றார்.