அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு 9 ஆயிரம் டொலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்றில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து கோர்ட்டை அவமதித்ததாக கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9 ஆயிரம் டொலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் நீதிமன்றத்தின் உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் என டிரம்பை நீதிபதி எச்சரித்துள்ளார்.