இந்திய குடியரசு தின விழாவை சிறப்பித்து டூடுல் வெளியிட்ட கூகுள்
இந்தியாவின் குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் இணைய தளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு சிறப்பான நாளையும்,அதன் முக்கியத்துவத்தையும் கொண்டாடும் வகையில் கூகுள் இணைய பக்கத்தில், சிறப்புப்பான சித்திரங்களை வடிவமைப்பதை அந்த நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழாவாக இன்னால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இவை அனைத்தையும்,சிறப்பிக்கும் விதமாக, உலகின் மிகப்பெரிய தேடுதல் தளமான கூகுள் இணையதளம் தனது முகப்பில், இசைக்கருவிகள் வடிவில் டூடுல் வெளியிட்டுள்ளது.