சீன மின்சார வாகனங்களை நிராகரிக்குமாறு ஒன்றாரியோ முதல்வர் கோரிக்கை
சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை நிராகரிக்க வேண்டுமனெ ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் கோரியுள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் சீனாவுடன் ஒப்பந்தம் செய்த பின்னர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஒன்டாரியோவில் உள்ள வாகனத் துறை மீது தீங்கு விளைவிக்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கார்னி முன்கூட்டியே இந்த விடயம் தொடர்பில் ஆலோசிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களை நிராகரிக்கவும் இங்கே வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களை ஆதரிக்கவும். இது எளிதானது ஃபோர்ட் தெரிவித்தார்.
கனடாவில் உற்பத்தி நிலையம் கொண்ட கார் நிறுவனங்களை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சீன அதிபர் சி ஜின்பிங் மற்றும் கார்னி இடையே, கனடா சீனாவுக்கு விதிக்கப்பட்ட 100% சுங்கங்களை குறைத்து, ஆண்டு தோறும் 49,000 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக, சீனா கானோலா மீதான சுங்க வரிகளை குறைத்தது. சீன மின்சார வாகனங்களை அனுமதிப்பதனால் கனடிய வாகன தொழிற்சாலை பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என ஃபோர்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.