ஒன்றாரியோ முதல்வரின் வீடு விற்பனைக்கு; எவ்வளவு தெரியுமா?
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்டின் (Doug Ford) வீடு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இட்டோபிகொக்கில் அமைந்துள்ள இந்த வீட்டின் சந்தைப் பெறுமதி 3.2 மில்லியன் டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்ட் (Doug Ford) , மறைந்த தனது தாயாரின் வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும், தற்போது வசிக்கும் வீட்டை விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் எனவும் அவர்கள் திருமண வயதினை அடைந்து விட்டதாகவும் போர்ட் (Doug Ford) தெரிவித்துள்ளார்.

இதனால் தனது தாயாரின் இல்லத்திற்கு செல்ல தீர்மானித்ததாக (Doug Ford) தெரிவித்துள்ளார். டக் போர்டின் (Doug Ford) இல்லம் சகல வசதிகளையும் கொண்டமைந்த அதி சொகுசு இல்லம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீடு சுமார் 4500 சதுர அடியைக் கொண்டமைந்தது  எனவும், 3.2 மில்லியன் டொலர் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        