எரிபொருளுக்கான வரிச் சலுகையை நீடித்த கனடிய மாகாணம்
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் எரிபொருளுக்கான வரிச் சலுகையை நீடித்துள்ளது.
பெற்றோல் மற்றும் எரிபொருட்களுக்கான வரிச் சலுகை இந்த ஆண்டு இறுதி வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலுக்கான வரி 5.7 சதத்தினாலும், ஏனைய எரிபொருட்களுக்கான வரியும் ஒரு லீற்றருக்கு 5.3 சதத்தினாலும் குறைக்கப்பட்டிருந்தது.
இந்த வரிக்குறைப்பு நடைமுறை எதிர்வரும் ஜூன் மாதம் 30ம் திகதியுடன் காலாவதியாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரிச் சலுகை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கம் கார்பன் வரியை அதிகரிக்கும் நிலையில், இவ்வாறு மக்களுக்கு வரிச் சலுகை வழங்குவது அவசியமானது என மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
மாகாண அரசாங்தக்தினால் வழங்கப்படும் வரிச் சலுகையினால் குடும்பமொன்று சராசரியாக 320 டொலர்களை சேமிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.