டிரம்புக்கு அழிவு! விமானத்தில் கூச்சலிட்ட இந்திய வம்சாவளி பயணி கைது
லண்டனில் இருந்து கிளாஸ்கோவுக்கு சென்ற ஈஸிஜெட் விமானத்தில், பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கூச்சலிட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டது. அபய் தேவதாஸ் நாயக் (வயது 41) என்ற நபர், விமானப் பயணத்தின் போது "அமெரிக்காவுக்கு அழிவு", "டிரம்புக்கு அழிவு" என கூச்சலிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதன்படி, கிளாஸ்கோவிற்கு வந்த விமானம் இறங்கியவுடன், கடந்த கிழமை காலை 8.20 மணியளவில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாயக், இந்திய வம்சாவளியையுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் பைஸ்லி ஷெரீப் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
.@BBCNews .@SkyNews no coverage yet of bomb threat incident on an easyJet plane this morning? I have full video available showing passenger take down and the man’s id as taken by a friend on the plane pic.twitter.com/SOTrAaKLng
— Trevor Nicosia 🧢🖌101 (@nyssa7) July 27, 2025
தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என ஸ்காட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானப் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையான நடவடிக்கைகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகக் கருதப்படுவதால், அவருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.