டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை தீவிரம்
டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
முன்னதாக டுவிட்டரை விலைக்கு வாங்கிய உடனே தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கியிருந்தார்.
இந்நிலையில் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை அளிக்க மேலாளர்களுக்கு எலான் மஸ்க் உத்தரவிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
.
நவம்பர் 1ஆம் திகதிக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பணியாளர்களின் எண்ணிகையை 75 சதவீதம் அளவிற்கு குறைக்கவும், மூன்று ஆண்டுகளில் வருவாயை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி தற்போது தற்போது சுமார் 7500 ஊழியர்கள் டுவிட்டரில் பணிபுரிந்து வரும் நிலையில் அந்த எண்ணிக்கை 2000 ஆக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.