ரொறன்ரோ சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதி களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக பல்வேறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 15 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் எனவும் வாகன சாரதிகளினால் வீதியை பார்க்க முடியாத நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் சில விமான பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் பல்வேறு விமான விபத்துக்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாகனங்களை மெதுவாக செலுத்துமாறு போலீசார் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.