லண்டனில் கோர சம்பவம்... பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி
லண்டனில் இரவு நேரம் வாகன சாரதி ஒருவர் பாதசாரிகள் மீது மோதியதில் இளைஞர் உட்பட நால்வர் பரிதாபமாக பலியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:40 மணிக்கு ஹைட் பார்க் மற்றும் தெற்கு Carriage சாலைகளின் முனையில் இச்சம்பவம் நடந்துள்ளது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த விபத்தில் சிக்கி பெண் ஒருவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார். ஆண் மற்றும் பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய இன்னொரு குழந்தை தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய 20 வயது மதிக்கத்தக்க நபர், சம்பவப்பகுதிக்கும் 6 கி.மீ அப்பால் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.