பிரான்ஸில் வாகன சாரதிகள் மீது புதிய சட்ட திருத்தம் ; கட்டாய சிறை
பிரான்ஸில் வாகன சாரதிகள் மீது புதிய சட்ட திருத்தம் ஒன்றை கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு இணங்காமை 'சிறைத்தண்டனைக்குரிய' குற்றமாக கருதப்படவேண்டும் எனும் வாதம் வலுத்துள்ளது.
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி நிறுத்தாமல் பயணிக்கும் சாரதிகளுக்கும் - காவல்துறையினருக்கும் இடையே இருக்கும் முரண்பாடு ஒரு நீண்டகால பிரச்சனையாகும்.

இந்நிலையில், இணங்காத சாரதிகளுக்கு 'கட்டாய சிறை' வேண்டும் என நாட்டின் 86% சதவீதமான மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்தனர். 13% சதவீதமானவர்கள் இதற்கு எதிர்ப்பும், 1% சதவீதமானோர் கருத்துக்கள் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
CNEWS, JDD மற்றும் Europe 1 போன்ற ஊடகங்களுக்காக CSA நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் விரைவில் இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.