போதைப்பொருள் கடத்தல்; இந்தியா, சீனா மீது குற்றம்சாட்டும் அமெரிக்கா
அமெரிக்காவுக்கு ஆண்டு அச்சுறுத்தல்கள் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் அறிக்கையில் பெண்டாலின் தயாரிக்க தேவைப்படும் ரசாயனங்கள் இந்தியா மற்றம் சீனாவில் இருந்து அதிகளவில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வினியோகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் போதைப் பொருள் பயன்பாடு சமீப காலங்களில் பெருமளவு அதிகரித்து வருகிறது. போதை பொருள் பயன்பாட்டை குறைக்கவும், சட்டவிரோத போதை பொருள் கடத்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் அந்நாட்டு அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
குற்றம்சாட்டும் அமெரிக்கா
இந்த நிலையில், போதை பொருள் தயாரிப்புக்கான ஃபெண்டானில் என்ற ரசாயன கடத்தலில் சீனா மற்றும் இந்தியா தான் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்டானில் என்ற ரசாயனக் கலவை வலி நிவாரணி வடிவில் வழங்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பெண்டானில் போதை பொருளை அதிகம் எடுத்துக் கொண்டதால் 52 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.
இதற்காகவே பெண்டானில் தயாரிப்பதற்கான ரசயானங்களை தயாரிக்கும் சீனா மீது அதிபர் டிரம்ப் அதிக வரி விதிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும், போதை பொருள் கடத்தலை தடுத்த தவறியதாக கனடா மற்றும் மெக்சிகோ மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.