மரணத்தில் முடிந்த முத்தம்...அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி தகவல்
ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான டென்னிசியில் பெண் ஒருவர் கைதிக்கு கொடுத்த முத்தம் காரணமாக கைதி உயிரிழந்த பகீர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறைக் கைதி ஒருவரை பார்வையிடும் போர்வையில் பெண் ஒருவர் வாயில் போதைப் பொருளை கடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண், கைதிக்கு முத்தமிட்டுள்ளதாகவும் அதன் போது வாயில் கடத்தி சென்ற போதைப் பொருளை கைதிக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதைப் பொருளை விழுங்கிய கைதி உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதி மாத்திரை அளவிலான மெதபெடமைன் என்னும் போதைப் பொருளை குறித்த கைதி உட்கொண்டதால் மரணம் சம்பவித்துள்ளது.
ராச்செல் டோலார்ட் என்ற பெண்ணுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜோஷ்வா பிறவுண் என்ற கைதியே இவ்வாறு போதைப் பொருள் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.
டென்னிசி மாநிலத்தின் ஹிக்மானில் அமைந்துள்ள சிறைச்சாலையில் குறித்த பெண், இந்த கைதியை பார்வையிட்டுள்ளார்.
இந்தப் பெண், குறித்த கைதிக்கு அரை அவுண்ஸ் அளவிலான போதைப் பொருளை வழங்கியுள்ளார்.
இதனை உட்கொண்ட கைதி, உயிரிழந்துள்ள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது போதைப் பொருள் மித மிஞ்சிய அளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதி போதைப் பொருள் குற்றச்சாட்டுக்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.