30,000 பொதுமக்கள் கொலை; சர்வதேச நீதிமன்ற முன்னிலையில் ஆஜரான ரொட்ரிகோ டுட்டர்டே
பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி 79 வயதான ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முதல் ஆசிய தலைவராக பதிவாகியுள்ளார்.
அவர் (Rodrigo Duterte) தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீடியோ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
30,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொலை
ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) நீண்டதூரம் பயணம் செய்ததை கருத்தில் கொண்டு நீதிபதி இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.
போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின்போது இவர் 30,000க்கும் அதிகமான பொதுமக்களை ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) கொலை செய்தார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
2016 முதல் 2022 முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவிவகித்த ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) கடந்த செவ்வாகிழமை(11) கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் விமானம்மூலம் ரொட்ரிகோ டுட்டர்டே நெதர்லாந்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் அவர் வீடியோ மூலம் கலந்துகொண்டவேளை அவரது குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான உரிமைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது பலவீனமானவராக காணப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) தனது பெயர் விபரங்களை உறுதி செய்தார்.
இதேவேளை தனது கட்சிக்காரர் ரொட்ரிகோ டுட்டர்டே (Rodrigo Duterte) பிலிப்பைன்சிலிருந்து கடத்தப்பட்டுள்ளார் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.