இன்று மற்றுமொரு நாட்டில் பயங்கர நில நடுக்கம்
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67 கிலோமீட்டர் தொலைவில், 20 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.37 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்றுமொரு நிலநடுக்கம்
இந்நிலையில் தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Get well soon Tajikistan ?? God help you #Tacikistan #earthquake pic.twitter.com/3QIO9qNziM
— KASİDE (@zakkumec) February 23, 2023
முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.
More Videos Strong 7.1-magnitude earthquake hits eastern #Tajikistan, near the border with China an Hour ago.
— Disaster News (@Top_Disaster) February 23, 2023
TELEGRAM JOIN ? https://t.co/9cTkji5aZq pic.twitter.com/2q8hknOZk9
4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு, 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான் சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது.
6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.