எபோலா வைரஸ் ; ஐ.நா. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு
கொங்கோவில் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசரகால நிவாரண நிதியிலிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆபிரிக்காவின் உகண்டா, கொங்கோ, சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களை எளிதில் தாக்கக்கூடியது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் எபோலா நோய்த்தொற்றுக்கு எதிரான அவசரகால நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபை தனது மத்திய அவசரகால நிவாரண நிதியிலிருந்து 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.