கனடாவில் தொழில் வாய்ப்புக்களை இழந்த 43000 பேர்! அதிர்ச்சி தகவல்
கனடாவில் சுமார் 43000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்த ஆண்டில் வேலை வாய்ப்பு இழப்பு இந்தளவு அதிகம் பதிவாகவில்லை.
எவ்வாறெனினும், வேலையற்றோர் வீதம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது.
கடந்த மே மாதம் வேலையற்றோர் வீதம் 5.1 வீதமாக காணப்பட்டது, தற்பொழுது இந்த எண்ணிக்கை 4.9 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
1976ம் ஆண்டின் பின்னர் பதிவான மிகவம் குறைந்தளவு எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. தனியார் மற்றும் அரசாங்கத் துறை பணிகளின் எண்ணிக்கையில் ஸ்திரத்தன்மை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மணித்தியாலத்திற்கான சம்பளங்களும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.