ஒன்றாரியோவில் கல்விப் பணியாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ... மூடப்படும் பாடசாலைகள்
ஒன்றாரியோ மாகாணத்தில் கல்விப் பணியாளாகள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாகாணம் தழுவிய தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக பாடசாலை சிற்றூழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆயிரக் கணக்கான பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் அதிகாரபூர்வமாக சட்டமொன்றையும் சட்டமன்றில் நிறைவேற்றியது.
இந்தக் கல்வித் தொழிற்சங்கத்தில் சுமார் 55000 பணியாளர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக றொரன்டோ பாடசாலை சபைக்கு உட்பட்ட பகுதி பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை அடிப்படையில் பாடங்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.