அவுஸ்திரேலியாவில் கல்வி; இலங்கை மாணவர்களை ஏமாற்றும் ஆள்கடத்தல்காரர்கள்!

Sri Lankan Peoples Australia
By Sundaresan Apr 26, 2023 04:12 PM GMT
Report

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஆள்கடத்தல்காரர்கள் ஏமாற்றும் நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஏமாறும் நடவடிக்கைகளில் ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தள்ள அவுஸ்திரேலிய ஊடகம் ஆள்கடத்தல்காரர்கள் தங்களை குடியேற்ற முகவர்களாக காண்பிக்கின்றனர் இதற்காக புதிய உத்திகளை பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் தங்கள் பெறுமதியான சொத்துக்களை விற்று அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ளமையும் ஆள்கடத்தல்காரர்கள் இவர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பின்னர் இவர்களின் கனவுகள் கலைந்துபோயுள்ளமையும் அவுஸ்திரேலிய செனெட் விசாரணையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கல்வி; இலங்கை மாணவர்களை ஏமாற்றும் ஆள்கடத்தல்காரர்கள்! | Education Australia Sri Lankan Students

மக்கள் தவறுதலாக வழிநடத்தப்படுகின்றனர் குறிப்பாக கல்விக்காக அவுஸ்திரேலியாவரும்போது அவர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என மெல்பேர்னிற்கான இலங்கையின் துணை தூதரகத்தை சேர்ந்த அதிகாரி சன்டித் சமரசிங்க தெரிவி;த்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் படிப்பை பூர்த்தி செய்த பின்னர் சிறந்த வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளி;த்து இலங்கையர்களை அழைத்துவருகின்றனர் ஆனால் அது நடப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேற முயல்பவர்கள் தனது பெயரை பயன்படுத்துகின்றனர் என இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலியாவின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கசன்டிரா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் நோக்கத்துடன் வரும் மாணவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள சிலர் தவறான தகவல்களை வழங்குகின்றனர் அவர்கள் தகுதிபெற்ற குடியேற்ற முகவர்கள் இல்லை அவர்களிடம் முகவர் அமைப்புகளும் இல்லை ஆனால் அவர்கள் மக்களின் வீடுகளிற்கு சென்று இவ்வளவு பணம் செலுத்தினால் இதனை செய்யலாம் என தெரிவிக்கின்றனர் எனவும் கசன்டிரா பெர்ணான்டோ செனெட் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

போலி முகவர்கள் தங்கள் மோசடி நடவடிக்கைகள் மூலம் பெருமளவு பணம் உழைப்பது தனக்கு தெரியும் என முன்னாள் உள்ளுராட்சி உறுப்பினர் சந்திர பமுகுசிங்க தெரிவித்துள்ளார்.

இது ஒருதிட்டமிட்ட பிரச்சினையா ஆள்கடத்தல்காரர்கள் அவுஸ்திரேலியாவில் செயற்படுகின்றனரா என செனெட் குழுவின் தலைவர் கேள்வி எழுப்பினார் அதற்கு ஆம் என தெரிவித்த பமுனுசிங்க அவர்கள் எதற்கும் பயப்படாதவர்கள் என குறிப்பிட்டார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US