ஈபிள் கோபுர விளக்குகளை அணைத்து மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி
மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் அன்னே ஹிடால்கோ (Anne Hidalgo) அறிவித்துள்ளார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் காலமானதை அடுத்து, அவரது நினைவாக இன்று இரவு பாரிஸின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படும் என்று பாரிஸ் நகர முதல்வர் அன்னே ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்சிஸ், தஞ்சம் தேடி வரும் ஏதிலிகளை வரவேற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் என அவர் குறிப்பிட்டார்.
இதனை நினைவுகூரும் வகையில், பாரிஸ் நகரில் உள்ள ஒரு இடத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸின் பெயரைச் சூட்டுவதற்கு நகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் பாரிஸின் நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.