கனடா அமெரிக்க எல்லையில் எட்டு பேர் உயிரிழந்த விவகாரம்: பொலிஸ் துறைக்கு அரசு அறிவித்துள்ள உதவி
மார்ச் மாதத்தில் கனடா அமெரிக்க எல்லையில் இந்தியர்கள் உட்பட எட்டு பேர் சடலங்களாக மீட்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
அந்த துயர சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் Akwesasne என்பதாகும். விடயம் என்னவென்றால், இந்த பகுதி கனடாவின் கியூபெக், ஒன்ராறியோ மற்றும், அமெரிக்காவின் நியூயார்க் ஆகிய நகரங்களின் எல்லைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
THE CANADIAN PRESS/Ryan Remiorz
ஆகவே, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் மக்கள் கடத்தல் நடக்கும் பிரபலமான இடமாக அது காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, அந்தப் பகுதியில் நடக்கும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக கனடாவின் பெடரல் அரசு நிதி உதவி ஒன்றை அறிவித்துள்ளது.
Akwesasne Mohawk Territory பகுதியில் குற்றச்செயல்களுக்கு எதிராக போராடுவதற்காகவும், மற்றும் சில உதவிகளுக்காகவும் 12 மில்லியன் டொலர்கள் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சரான Marco Mendicino அறிவித்துள்ளார்.
இந்த தொகையில், 10.4 மில்லியன் டொலர்கள் குற்றச்செயல்களுக்கு எதிராக போராடுவதற்காக Akwesasne Mohawk பொலிஸ் துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய உபகரணங்கள் வாங்கவும், வன்முறையை தடுப்பதற்காக உழைக்கும் சமுதாயக் குழுக்களுக்காகவும் கூடுதல் நிதியும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.