வெளிநாட்டில் விமான விபத்தில் சிக்கி பலியான கனேடியர்: வெளியான புகைப்படம்
இத்தாலியின் மிலன் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் கனேடியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மிலன் நகரின் புறநகர் பகுதியில் ஞாயிறன்று குட்டி விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் உட்பட 8 பேர் சம்பவயிடத்திலேயே பலியானார்கள்.
தற்போது குறித்த விமானத்தில் பயணித்த 6 பயணிகளில் ஒருவர் கியூபெக் சட்டத்தரணி ஜூலியன் ப்ரோசார்ட் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் தொடர்பில் உறவினர்களும் நண்பர்களும் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான விமானத்தை செலுத்திய விமானி கட்டுமான நிறுவன அதிபரும் கோடீஸ்வரருமான Dan Petrescu என தெரிய வந்துள்ளது. இவரது மகன் Dan Stefan Petrescu என்பவர் கனேடியரான ஜூலியன் ப்ரோசார்ட்டின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது.
?Mon bel ami @julbross, tu nous as quittés beaucoup trop tôt et si brutalement.
— Marwah Rizqy (@marwahrizqy) October 4, 2021
J’étais loin de me douter que lundi passé je te serrais dans mes bras pour une dernière fois. Va en paix, belle âme. Ce soir, nous illuminerons ta maison.
Je t’aime. https://t.co/zN7iI1jhDb
அவரும் இந்த விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளார். 35 வயதான ஜூலியன் ப்ரோசார்ட் Montreal பகுதியில் சட்டத்தரணியாக பணியாற்றி வந்துள்ளார்.