கலிபோர்னியாவில் பனிச்சரிவு: 8 பேரின் உடல்கள் மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லேக் டாஹோ (Lake Tahoe) பிராந்திய பின்நாட்டு மலைப்பகுதியில் ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் மாயமான ஸ்கீயர்களில் 8 பேரின் உடல்கள் மீட்பு குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் ஒருவர் இன்னும் காணாமல் போயுள்ளார்; அவர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவரின் துணைவியார் தேடுதல்-மீட்பு குழுவில் பணியாற்றியவர் என்பதால், மீட்பு நடவடிக்கைகள் உணர்ச்சிவசப்பட்ட சவால்களை சந்தித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காஸ்டல் பீக் பகுதியில் “புட்பால் மைதானம்” அளவிலான பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. மொத்தம் 15 ஸ்கீயர்கள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் தெரிவித்ததாவது, 8 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டாலும், கடுமையான வானிலை காரணமாக அவற்றை உடனடியாக மீட்க முடியவில்லை.
பனிச்சரிவு ஏற்பட்ட பின்னர் அந்தப் பகுதியில் மேலும் 3 அடி (90 செ.மீ.) பனி பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “அபாய நிலை இன்னும் அதிகமாகவே உள்ளது,” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.