கனடாவில் சீக்கிய முதியவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்திய இளைஞர்
கனடாவில் சீக்கிய முதியவர் ஒருவர் மீது இனவெறுப்புத் தாக்குதல் நடத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று ஒன்ராறியோவிலுள்ள Woodstock என்னுமிடத்தில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் ஷிங்காரா சிங் என்னும் சீக்கிய முதியவர்.
அப்போது அவ்வழியே வந்த இளைஞர் ஒருவர் திடீரென அந்த முதியவரைப் பிடித்து தள்ளியுள்ளார்.
அத்துடன், அவரை இனரீதியாகவும் மோசமான வார்த்தைகளாலும் விமர்சித்துள்ளார் அந்த இளைஞர்.

மேலும், கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்திய அந்த இளைஞர், அந்த முதியவரைப் பார்த்து, ’நீ என் நாட்டில் என்ன செய்கிறாய், என் நாட்டை வீடு வெளியே போ’ என சத்தமிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அந்த சீக்கிய முதியவர் தாக்கப்பட்டதற்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
The little racist from Woodstock has been arrested.
— EconomicWoes 🤖 (@ManyBeenRinsed) April 23, 2026
He assaulted an elderly Sikh man for merely existing.
This is the state of 🇨🇦.
I need this video shared all around the world.
Look at this little twat wearing Walmart Raptors gear acting like a tough guy.
Disgusting. pic.twitter.com/6aFWoBbxt1