மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த மின்சார காரால் ஏற்பட்ட இழப்பு
சீனாவின் ஷாங்காயில் உள்ள நியோ தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து மின்சார கார் ஒன்று விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாக சீனாவின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான நியோ கூறுகிறது.
புதன் கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஊழியர் ஒருவரும், பங்குதாரர் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இருவரும் குறித்த காருக்குள் இருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையிஒல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கார் விழுந்த இடத்திலிருந்து மூன்றாவது மாடி பகுதி ஒரு ஷோரூம், சோதனை வசதி அல்லது கார் பார்க்கிங் என்று பலவிதமாக விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணத்தைப் பற்றிய விசாரணை மற்றும் பகுப்பாய்வைத் தொடங்க எங்கள் நிறுவனம் பொது பாதுகாப்புத் துறையுடன் ஒத்துழைத்துள்ளதாக தெரிவிக்கும் நிறுவனம், விபத்து தொடர்பில் நாங்கள் மிகவும் வருத்தமாக உள்ள்ளதாகவும் கூறியுள்ளது.
, மேலும் உயிரை இழந்த எங்கள் சக ஊழியர் மற்றும் பங்குதாரருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறோம். குடும்பங்களுக்கு உதவ ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கார் நிறுவனம் கூறியுள்ளது.