கனடாவில் குறிப்பிட்ட மருந்து ஒன்றைத் திரும்பப் பெறும் நிறுவனம்: காரணம்?

Balamanuvelan
Report this article
கனேடிய மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, குறை இரத்தச் சர்க்கரை பிரச்சினையில் பயன்படுத்தப்படும் மருந்து ஒன்றைத் திருப்பியளிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Eli Lilly Canada என்ற அந்த நிறுவனம், இன்சுலின் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக குறையும் நிலையில், அதற்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Glucagon என்ற மருந்தை திரும்பப் பெற்றுவருகிறது.
D239382A என்ற lot எண் கொண்டதும், காலாவதி திகதி மே 10, 2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளதுமான Glucagonஐ திருப்பிக் கொடுக்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பிரச்சினை என்னவென்றால், அந்த மருந்து பவுடர் வடிவில் தயாரிக்கப்படும் மருந்து. ஆனால், போத்தல்களில் அது திரவ வடிவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவுடர் வடிவில் இருக்கும் அந்த மருந்தை அதனுடன் கொடுக்கப்பட்டுள்ள திரவத்தில் கரைத்து உடனடியாக பயன்படுத்தவேண்டும். ஆனால், இந்த மருந்து ஏற்கனவே திரவமாக உள்ளது.
ஆகவே, இந்த குறிப்பிட்ட lot எண் கொண்ட மருந்தை பயன்படுத்தவேண்டாம் என்று கனடா சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது. அப்படியே ஒரு வேளை பயன்படுத்தி ஏதேனும் பிரச்சினைகள் இருப்பதாக தெரியவந்தால் உடனடியாக அவசர உதவியை அழைக்குமாறு கனடா சுகாதாரத்துறை மக்களை வலியுறுத்தியுள்ளது.