மூன்றாவது திருமணத்திற்கு தயாராகின்றாரா 50 வயது எலான் மஸ்க்!
உலகின் பிரபல கோடீஸ்வரர்களுள் ஒருவரான 50 வயது எலான் மஸ்க் (Elon Musk), 27 வயது இளம் நடிகையுடன் டேட்டிங் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க். விண்வெளிக்கு செயற்கைகோள்களை அனுப்பும் நிறுவனத்தை வைத்து நடத்தி வருகின்றார்.
பலவருட சோதனைக்கு பின்னர் விண்வெளிக்கு செல்லும் ரொக்கெட்டை மீண்டும் தரையில் பத்திரமாக தரையிறங்க வைத்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார் எலான் மஸ்க் (Elon Musk).
உலகின் முக்கியமான செல்வந்தர்களுள் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க் (Elon Musk), தற்போது இளம் நடிகையுடன் டேட்டிங் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
எலான் மஸ்க் (Elon Musk) மற்றும் அவுஸ்திரேலிய நாட்டினை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க திரைப்பட நடிகை நடாஷா பாசெட் (27) ஆகியோர், எலானின் சொந்த விமானத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனியாக சந்தித்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இருவரும் கடத்த ஒருவருடமாக நட்பு ரீதியாக பழகி வந்ததாகவும், அதன் அடிப்படையில் இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதேவேளை ஏற்கனவே எலான் மஸ்குக்கு 2 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர்.
அதேசமயம் அவர்கள் இருவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றுள்ள எலான் மஸ்க் (Elon Musk), தற்போது மீண்டும் திருமண பந்தத்தில் இணைய போகிறாரா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.