உலகின் முதல் ட்ரில்லியனர் அந்தஸ்த்தை இழந்தார் எலான் மஸ்க்!
உலகின் முதல் டிரில்லியன் நபர் என்ற அந்தஸ்த்தை எலான் மஸ்க் (Elon Musk) இழந்துள்ளார். அமெரிக்க பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளின் சரிவால் எலான் மஸ்க் ட்ரில்லியனர் அந்தஸ்த்தை இழந்தார்.
SPACEX நிறுவனம் IPO வெளியிட்டதை அடுத்து, 1.32 ட்ரில்லியனர் டாலராக உயர்ந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு, தற்போது சுமார் 957 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

ஜூன் 12 அன்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சாதனை படைக்கும் வகையில் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து மஸ்க்கின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி ஏற்பட்டது.
எனினும் ட்ரில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்டிருந்த நிலையை இழந்தபோதிலும், உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற இடத்தைத் தொடர்ந்து பெரும் இடைவெளியுடன் மஸ்க் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.