ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவை நீக்கிய எலான் மஸ்க்!
உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க்(Elon Musk), பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சுமார் 3.5 லட்சம் கோடிக்கு வாங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் ட்விட்டர் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால்(Barak Agarval) மற்றும் சில முக்கிய தலைமை நிர்வாகிகளை அவர் நீக்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று எலான் மஸ்க்(Elon Musk) டுவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்காக மாதந்தோறும் ரூ. 1600 வசூல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவையும் அதிரடியாக நீக்கியுள்ளார். அந்தக் குழுவில் உள்ள ஒன்பது பேரையும் ஒரே அறிவிப்பில் நீக்கியுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் தற்போது தான் மட்டுமே இருப்பதாகவும், டுவிட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் மட்டுமே இருப்பதாகவும் எலான் மஸ்க் (Elon Musk)தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.