எலன் மஸ்கின் அதிரடி முடிவு!
Teslaவின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க்(Elon musk) நிறுவனத்தின் 7.92 மில்லியன் பங்குகளை விற்றிருக்கிறார்.
அந்தப் பங்குகளின் மதிப்பு சுமார் 6.9 பில்லியன் டாலர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள Tesla பங்குகள் விற்கப்பட்டன.
ட்விட்டர் தளத்தைப் பெற்றுக்கொள்ளப் பணம் திரட்ட அந்தப் பங்குகள் விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் கூடுதல் Tesla பங்குகளை விற்கத் திட்டமிடப்படவில்லை என்று கூறப்பட்டது.
இம்மாதம் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை Teslaவின் 7.92 மில்லியன் பங்குகள் விற்கப்பட்டன.
அதையடுத்து இப்போது Teslaவின் 155.04 மில்லியன் பங்குகள் எலன் மஸ்க்கிடம்(Elon musk) எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.