சோதனைப் பயணத்தின் போது வெடித்து சிதறிய எலோன் மஸ்க்கின் ராக்கெட்!
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான புதிய ராக்கெட் ஸ்டார்ஷிப் (Starship) அதன் முதல் சோதனைப் பயணத்தின் போது வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, அடுத்த ஸ்டார்ஷிப் சோதனை சில மாதங்களில் முன்னெடுக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள தனியார் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிலையமான ஸ்டார்பேஸில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 8:33 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்கெட் புறப்பட்ட சுமார் 3 நிமிடங்களில், கட்டுப்பாட்டை மீறிச் சென்றதுடன், வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்பேஸ்எக்ஸ் உரிமையாளரான எலோன் மஸ்க், ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்திருந்தார்.
மேலும், ராக்கெட்டிற்கான எதிர்பார்ப்புகளையும் அவர் குறைக்க முயன்றார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"இது மிகவும் ஆபத்தானது என்பதுடன் மிகவும் சிக்கலானது. இந்த ராக்கெட் தோல்வியடைய ஒரு மில்லியன் வழிகள் உள்ளன" என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், அடுத்த ஸ்டார்ஷிப் சோதனை சில மாதங்களில் முன்னெடுக்கப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.