நிறுவனம் வங்குரோத்து அடைந்து விடுமா என அஞ்சும் எலான் மாஸ்க்
தமது டெஸ்லா நிறுவனம் வங்குரோத்து அடைந்து விடுமா என அஞ்சுவதாக உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் புதிய உற்பத்திச்சாலைகள் மூலம் பல பில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலி மற்றும் கோவிட் முடக்க நிலை போன்ற காரணிகளினால் இவ்வாறு டெஸ்லா நிறுவனம் பாரியளவில் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.
உற்பத்திச்சாலைகள் தொடர்ச்சியாக இயங்கினால் நட்டம் அடைவதனை தவிர்க்க முடியும் எனவும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காரணமாக ஷங்காயில் காணப்பட்ட உற்பத்திசாலை மூடப்பட்டதுடன், ஜெர்மன் மற்றும் டெக்ஸாஸில் அண்மையில் நிறுவப்பட்ட உற்பத்திசாலைகளினாலும் பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது.
விநியோகச் சங்கிலி பிரச்சினை காரணமாகவே இவ்வாறு பல பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஆய்வாளர்கள் எதிர்வுகூறுவதனை விடவும் டெஸ்லா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக காணப்படுகின்றது என மற்றுமொரு தரப்பு ஆய்வாளர்கள் விமர்சனம் வெளியிட்டுள்ளனர்.