டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் எலான் மஸ்க் கொண்டுவந்த அதிரடி மாற்றம்!
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், (Elon Musk) அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக நிறுவன ஊழியர்கள் பலரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து டுவிட்டரில் புளு டிக்கிற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. நிறுவனத்தில் அடுத்தடுத்து நடந்த மாற்றங்கள் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எலான் மஸ்க் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமை அலுவலகத்தில் தற்போது பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
இதில் நிறுவனத்தில் இருந்த சோபாக்கள், நவீன இருக்கைகள் போன்றவற்றை அவர் படுக்கைகளாக மாற்றி உள்ளார். இரட்டை சோபாக்கள் ஒற்றை படுக்கையாக மாறி உள்ளது.
அவையும் நவீன வடிவமைப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்கள் மற்றும் இருக்கைகள் படுக்கையான படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடும் பணி செய்யும் ஊழியர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்க இந்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படங்கள் வைரலானதை தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ நகர அதிகாரிகள் வணிக ரீதியாக பதிவு செய்யப்பட்ட கட்டிடத்தில் ஓய்வறைகள் கட்டியது ஏன்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.