உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரகம் விடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு!
ருமேனிய எல்லையில் இருந்து புகாரெஸ்டுக்கு செல்ல இந்திய மாணவர்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள், அண்டை நாடான ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து மீட்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்படுகிறார்கள்.
இந்த நிலையில் ருமேனிய எல்லையில் இருந்து புகாரெஸ்டுக்கு செல்ல இந்திய மாணவர்கள் பணம் செலுத்த வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து உக்ரைன்-ருமேனிய எல்லையில் இருந்து புகாரெஸ்டுக்கு இந்திய மாணவர்களை அழைத்து செல்ல சிலர் பணம் வசூலிப்பதாக எங்கள் கவனத்துக்கு வந்தது.
இதன்படி புகாரெஸ்டுக்கு அழைத்து செல்வது உட்பட இந்திய தூதரகம் அளிக்கும் அனைத்து சேவைகளும் இலவசம் ஆகும்.
எனவே, இதற்காக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.