உலகை உலுக்கிய சவப்பெட்டி ; அலி கமெனியின் இறுதிச்சடங்கில் இதயங்களை உரைய வைத்த சம்பவம்
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார்.
அலி கமேனியுடன் சேர்த்து, அவரது மூத்த மகள், மருமகன், மருமகள் மற்றும் அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா ஆகிய அனைவரும் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்களின் இறுதிச்சடங்கு கடந்த 4 மாதங்களின் பின்னர் தற்போது போர்ப் பதற்றங்கள் சற்றுத் தணிந்து, இறுதிச்சடங்குகள் முறைப்படி நடக்கிறது.
இந்நிலையில் அங்கு வந்திருந்த அனைவரின் நெஞ்சையும் உலுக்கிய ஒரு காட்சி, கமேனியின் 14 மாதப் பேத்தியான ஜஹ்ரா முகமது கோல்பயேகானியின் சிறிய சவப்பெட்டி.
ஈரான் தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட பெரிய சவப்பெட்டிகளுக்கு நடுவே, அதே தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்த அந்தச் சிறு குழந்தையின் சிறிய சவப்பெட்டி அஞ்சலி செலுத்த வந்தவர்களின் இதயங்களை உரைய வைத்தது.
தலைநகர் தெஹ்ரானில் நேற்று இறுதிச் சடங்கு நிகழ்வுகள் தொடங்கின. வரும் நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு அவர்களது உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 9 அன்று மஷ்ஹாரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.