அமெரிக்க மதுபான வகை விற்பனையை இடைநிறுத்திய கியூபெக்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமெரிக்க மதுபான வகைகள் விற்பனை செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு தொடர்பாக அதிருப்தியை வெளியிடும் நோக்கில் அமெரிக்க பொருட்கள் விற்பனையை நிறுத்தியுள்ளது.
கியூபெக் மாகாண அரசாங்கத்தின் மதுபான விற்பனை நிலையங்களில் அமெரிக்காவின் பிரபலமான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 25 வீத வரியை விதித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வரி விதிப்பிற்கு பல்வேறு வழிகளில் அதிருப்தியும் எதிர்ப்பும் வெளியிடப்பட்டு வருகின்றது.
அதன் எதிரொலியாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் முதல்வர் டேவிட் எபி அரசாங்க மதுபான விற்பனை நிலையங்களில் அமெரிக்க மதுபான வகைகளை விற்பனை செய்வதில்லை என தீர்மானித்துள்ளார்.