பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் உயர்வு!
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் வீட்டு உபயோக எரிசக்தி கட்டணங்கள், இன்று (1) முதல் 13 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிசக்தி ஒழுங்குமுறை அமைப்பான ‘Ofgem’ இன் விலைக் கட்டுப்பாட்டு வரம்பிற்குள் வரும் வாடிக்கையாளர்களில், ஸ்மார்ட் மீட்டர் வசதி இல்லாதவர்கள் தங்களது தற்போதைய மீட்டர் அளவீட்டை உடனடியாக சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் பழைய கட்டண விகிதத்தில் பயன்படுத்திய மின்சாரத்திற்கு புதிய, கூடுதல் விலையில் கட்டணம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியும் என நுகர்வோர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் போரின் விளைவாக, சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கணிசமாக உயர்ந்ததே இந்த உள்நாட்டுக் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
சமீபத்தில் எட்டப்பட்ட அமெரிக்க – ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு ஓரளவிற்கு நிம்மதியை அளித்துள்ளது. அதேசமயம் கட்டணங்கள் ஆரம்பத்தில் பயந்ததை விட அதிக அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.