பிரித்தானியா மகாராணி சென்ற பகுதிக்குள் ஆயுதத்துடன் நுழைந்த நபரால் பரபரப்பு!
பிரித்தானியா மகாராணி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் தாக்குதல் ஆயுதத்துடன் நுழைய முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ப்ரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வின்ட்சர் கோட்டைக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயன்ற ஒருரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை ஆபத்தான ஆயுதங்களுடன் ஒருவர் உள்ளே நுழைய முயன்றார் ஆனால் அவர் கட்டிடங்கள் எவற்றிற்குள்ளும் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அரசகுடும்பத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளோம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைவது மற்றும் தாக்குதலிற்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதத்தை வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபர் கைதாகியுள்ளார்.
அதேவேளை கைதானவர் 19 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் உள்ளே நுழைந்ததும் பாதுகாப்பு பொறிமுறைகள் உடனடியாக செயற்பட ஆரம்பித்தன அவரால் கட்டிடங்கள் எவற்றிற்குள்ளும் நுழைய முடியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.