கனடாவில் கடும் பனி மூட்டம் குறித்து எச்சரிக்கை
கனடா டொரண்டோ பெரும்பாக பகுதியின் (GTA) வடக்கு பகுதிகளில் இம்முறையே ஏற்பட்டுள்ள கடுமையான கடும் பனி மூட்டம் நிலவும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில இடங்களில் மூடு பனி காரணமாக வாகனங்களை செலுத்த முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதைகளை தெளிவாக பார்க்க முடியாத காரணத்தினால் பயணங்கள் ஆபத்தாக இருக்கலாம்," என சுற்றுச்சூழல் கனடா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை பனி கூட்டமான வானிலை தொடரும் எனவும், ஆனால் வெப்பநிலை 13°C ஆக குறையும் எனவும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெயில் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 14°C – இது பருவமழை சராசரியை விட 2°C குறைவானதாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.